நம்ம பயலுவ எல்லாம் ஏன்டா கல்யாணம்னா இப்படி தெரிச்சு ஒடுரானுகணு பாத்தா இப்பத்தான தெரியுது. என்னத்த கன்னய்யா RENJUKU "என்னத்த சொல்லி என்னத்த பாத்து (து) கேட்டு" படிங்க படிங்க
சாப்ட்வேர் படிச்ச நம்ம ஊரு பொண்ணு ஒண்ணு இருக்குது டா தம்பி கல்யாணம் கட்டிகிற வயசு வந்துருச்சு உனக்கும். தாத்தாக்கு வேர வயசு ஆயிபோச்சுணு அம்மா சொல்ல "ஏம்மா தாத்தானா வயசு அதிகமா தானாமா இருக்கும் நு சொல்ல முடியாம மன்டைய வேற மாதிரி ஆட்டுனதில அம்மா confuse ஆயி, பாத்தீங்களா பாத்தீங்களா எம்புள்ள என்ர பேச்ச என்னைக்கும்.....balance நீங்களே பிஃல் பண்ணிக்கங்க..
இந்த பயபுள்ள பேசின பேச்சே அம்புட்டு தான்..பேஃக் டு அம்மணி!!
அம்மணியின் தந்தை: பாப்பா (புரியுது மக்களே :)) படிப்ப நல்ல படியா முடிச்சுட்ட, இனி உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாத்துட்டோம்ணா எங்க கடமை முடிஞ்ஞிரும் (உங்க கடம முடிஞ்ஞிரும் சரி அந்த பயபுள்ள வாழ்க்கையே முடிஞ்ஞிரும் ல...கேக்குது மக்களே உங்க mind voice)
அம்மணியின் தாய்: பாப்பா, கண்ணு, சாமி, தங்கம், அம்மாடி, ராசாத்தி (ஓகே, மக்களே டயர்டு ஆயிட்டிங்களா?) உனக்கு ஒரு நல்ல இஞ்சினியர் மாப்பிள்ளயா படிச்ச பையனா எலிகாப்டர் எரொப்பிலென் (first spelling correct ah adinga) ஓட்ரவனா பார்த்துடலாம்.
அம்மணி: டாடி, மம்மி, இஞ்சினியரிங் படிச்ச பையனா? அது UG தானே. நான் PG ல படிச்சிருக்கேன்.
அம்மணியின் தந்தை: அ (பேச try பண்றாறாமா?!)
அம்மணியின் தாய்: "ம்" நு ஒரு சவுண்டு
அம்மணியின் தந்தை: சரிம்மா.
அம்மணியின் தாய்: PG படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.
அம்மணி: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.
அம்மணியின் தாய்: பாப்பா, இஞ்சினியர் படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, PG மாப்பிள்ளைனா வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.
அம்மணியின் தந்தை: அ (மறுபடியும் பேச try பண்றாறாமா?!)
அம்மணியின் தாய்: "ஷ்" (இந்தம்மா பெரிய music director போல ண்ர உங்க doubt கேட்ருச்சு)
அம்மணியின் தந்தை: சரிம்மா.
அம்மணி: PG பண்ணிருக்கனும். பட் arrears வச்சிருக்கணும். (அதாகப்பட்டது மக்களே, invitation ல மாப்பிள்ளை பேருக்கு பின்னால டிகிரிக்கு மேல கோடு போட்டுருக்கணும்...புரியுதா ஜனங்களே அம்மணி யோட புத்திசாலித்தனத்த?)
அம்மணியின் தாய்: சூப்பரா இருக்கு பாப்பா. அடுத்து
அம்மணியின் தந்தை: வெளியே கடவுள், உள்ளே மிருகம் RENJUKU
பீல் பண்றார் (மனசுக்குள்ள)
அம்மணி: எனக்கு என் கெரியர்/ஆம்பிசன் தான் முக்கியம் (என்னது ambulance ஆ?)
அம்மணியின் தந்தை: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தரேன்.
அம்மணி: டாடிடி! மம்மி டாடிய பாருங்க
அம்மணியின் தாய்: %$#^&@!@#$^$&$@
அம்மணியின் தந்தை: !!! (ஆப் ஆயிட்டாருங்கோ..)
அம்மணி: நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது. நான் வேலைக்கு போகலன கூட.
அம்மணியின் தாய்: ?!?!?!
அம்மணியின் தந்தை: அற கி.மீ ஓடி போகலாமானு யோசிக்கிறார்
அம்மணியின் தாய்: சரி பாப்பா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேணும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.
அம்மணி: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன் போகாமலும் இருப்பேன். அது என் இஷ்டம்.
அம்மணியின் தந்தை: வெளங்கிரும் (மனசுக்குள்ளதான்)
அம்மணியின் தாய்: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.
அம்மணி: பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு லட்சணமா தெரியனும், ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும்.
அம்மணியின் தந்தை: மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே பாப்பா?
அம்மணி : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.
அம்மணியின் தாய்: அது.... (அஜித் ணு நெனப்போ...)
அம்மணி: அப்புறம் பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.
அம்மணியின் தந்தை: உனக்கு ABCD ஒலுங்காகூட படிக்க தெரியாது..எல்லாம் நேரம்..again என்னத்த கன்னய்யா RENJUKU "என்னத்த சொல்லி என்னத்த பாத்து (து) கேட்டு" படிங்க படிங்க
அம்மணி : நாங்க இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.
அம்மணியின் தந்தை: இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வச்சு கூட படுக்க மாட்டாங்க.
அம்மணி: Last but not least. எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா
அம்மணியின் தந்தை: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.
அம்மணியின் தாய்: "ஷ்ஷ்ஷ்..." (கொஞ்சம் பலமா)
அம்மணியின் தந்தை: (பம்மறார்)
அம்மணி: இருங்க சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.
அம்மணியின் தாய்: ?????
அம்மணியின் தந்தை: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற (ஏக்கமா பாக்கறார்).
அம்மணி: அதெல்லாம் இல்லை மம்மி. அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்
அம்மணியின் தந்தை மயக்கம் போட்டு விழுகிறார்...
Friday, March 18, 2011
கல்யாணம்?!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment