What a beautiful song?!
கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய்
போதாதென சின்னசிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
(கண்களிரண்டால்)
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
(கண்களிரண்டால்)
பிறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய்
போதாதென சின்னசிரிப்பில் ஒரு கள்ளசிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
P.S. You can download this song from the URL
http://tamilmusica.net/index.php?l=12&p=2008/Subramaniyapuram/Kangal%20Irandal.mp3
Mr.H
Saturday, July 26, 2008
கண்களிரண்டால உன் கண்களிரண்டால்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment